ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்: 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  

ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்: 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பயணச்சீட்டு வழங்காததால் பயணிகள் அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.  இதனால் அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை - சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.