கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால் இரட்டைக் குழந்தைகளின் தாய் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர் புகார்...

சேலத்தில் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால், இரட்டைக் குழந்தைகளின் தாய் உயிரிழந்த நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால் இரட்டைக் குழந்தைகளின் தாய் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர் புகார்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி, சுபலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுடன் சுபலட்சுமி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சித்ரா, கடந்த 19-ம் தேதி சுபலட்சுமியை கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்திய 3 நாட்களுக்கு பின்னர் சுபலட்சுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தியதால் தான் மனைவி உயிரிழந்ததாக கூறி செவிலியர் சித்ரா மீது மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூர்த்தி மனு அளித்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்திய செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.