புயலால் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்கள் & சிசிடிவி கேமராக்கள்...! காவல்துறை தகவல்...!

புயலால் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்கள் & சிசிடிவி கேமராக்கள்...! காவல்துறை தகவல்...!
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 65 - 75 கி.மீ வேகத்திற்கு வீசிய சூறைக்காற்றால் சென்னை மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததுடன், வீட்டின் மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பல சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்துள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிவதில் காவல்துறையினருக்கு பேருதவியாக இருக்கும் சிசிடிவி கேமராக்களும், சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், அந்த சேதமடைந்த சிசிடிவி கேமராக்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும், வேறு எங்கேனும் போக்குவரத்து சிக்னல்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புயலால் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாற்றி பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளாதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com