பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற மீன்பிடி திருவிழா - மத பாகுபாடுகளை கடந்து ஏராளமான மக்கள் பங்கேற்பு!!

பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற மீன்பிடி திருவிழா - மத பாகுபாடுகளை கடந்து ஏராளமான மக்கள் பங்கேற்பு!!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மத பாகுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விராலிமலை இலுப்பூர் பொன்னமராவதி திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை காலம் முடிந்த பின்னர், கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன்மூலம், மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு, விராலிமலை அடுத்த விராலூர் குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

கச்சா, கூடை, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு அவர்கள் நாட்டு வகை மீன்களான விரால், கெண்டை, கெளுத்தி, குறவை போன்ற மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.