விஜயகாந்திற்கு  டிரக்கோஸ்டமி சிகிச்சை; மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

விஜயகாந்திற்கு  டிரக்கோஸ்டமி சிகிச்சை; மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு தொண்டையில் டிரக்கோஸ்டமி எனும் அறுவை சிகிச்சை செய்து ஓரிரு நாளில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக இன்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

 அதில் கடந்த 24 மணி நேரமாக உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் நுரையீரல் சிகிச்சை வழங்க இருப்பதாக அறிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாகவே இயற்கையாக மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு வந்ததால் செயற்கை சுவாச கருவி எனும் ஆக்சிஜன் உதவியில் இருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரமாக வெண்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், வெண்டிலேட்டர் அவரது உடலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நுரையீரல் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள டிரக்கோஸ்டமி எனும் தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்

டிரக்கோஸ்டமி சிகிச்சை என்பது நுரையீரலுக்கு தற்காலிக மூச்சுக் குழாயை அமைத்து வெளியில் இருந்து வென்டிலேட்டர் உதவியுடன் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவது. இந்த சிகிச்சையை ஓரிரு நாளில் வழங்க இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "தமிழ்நாட்டில் நடப்பது தந்திர மாடல் ஆட்சி" இபிஎஸ் விமர்சனம்!