ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் :  விடுமுறை நாளில் குடும்பத்துடன் மகிழ்ச்சி !!

பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில்  குடும்பத்துடன் குவிந்த  சுற்றுலா பயணிகள். 

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் :  விடுமுறை நாளில் குடும்பத்துடன் மகிழ்ச்சி !!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள  ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அருவிகளில் குளிக்கவும், இயற்க்கை அழகை கண்டு ரசிக்க பரிசல் சாவரி செய்யவும், தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து  தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதே போல் விடுமுறை நாட்களிலும், ஆயிரகணக்கான   சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அதே போல் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால்  தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று இரவிலிருந்து ஒகேனக்கல்லு வரத்துவங்கினர். விடுமுறை  என்பதால் குடும்பத்துடன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்துக்கொண்டு அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். அதே போல் அங்குள்ள சமைக்கும் மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மாவட்ட நிர்வாகம் பரிசல்  ஓட்ட அனுமதியளித்தும், பரிசல் ஓட்டிகள் காவிரி ஆற்றில் 25 ஆயிரம் கன நீர் வந்தாலும் சின்னாறு படுகையில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என  கடந்த சில தினங்களாக பரிசல் இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளதால், இதனால் பரிசல்  சவாரி செய்ய முடியாமல் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.