”சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பா் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்" அமைச்சர் வலியுறுத்தல்!

”சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பா் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்" அமைச்சர் வலியுறுத்தல்!

சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சா் ராமச்சந்திரன் தொிவித்துள்ளாா். 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா துறை அமைச்சா் ராமச்சந்திரன் பங்கேற்று பேசுகையில், இந்தியாவிலேயே அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலா தலமாக தமிழ்நாடு முன்னேறி உள்ளது என பெருமிதம் தொிவித்தாா். 

இதையும் படிக்க : சேலம் வெடி விபத்து : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

தொடா்ந்து பேசிய அவா், சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.