மதுரை மீனாட்சி மிஷனில்...முதன்முறையாக புற்றுநோய்க்கான புதிய நவீன சாதனம் தொடக்கம்...!

மதுரை மீனாட்சி மிஷனில்...முதன்முறையாக புற்றுநோய்க்கான புதிய நவீன சாதனம் தொடக்கம்...!
Published on
Updated on
1 min read

இந்தியாவிலேயே முதன்முறையாக புற்றுநோயை கண்டறிந்து சரிசெய்யும் கிளியர் ஆர்டி மற்றும் சின்க்ரனி வசதியுடன் கூடிய டோமோதெரபி சாதனம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

புற்றுநோய் :

பொதுவாக, ஒரு மனிதனுக்கு புற்றுநோய் வந்தால் அவருடைய வாழ்நாள் காலம் என்பது குறைவு தான். ஏனென்றால், இதுவரையிலும் புற்று நோய்க்கு என்று எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு குறுகிய காலத்திலே உயிரிழந்து விடுகிறார்கள்.

நவீன சாதனம் தொடக்கம் :

இந்நிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக, புற்று நோய்க்கட்டியின் தன்மையை கண்டறிந்து அதனை முழுமையாக அகற்றுவதற்கான கிளியர் ஆர்டி மற்றும் சின்க்ரனி வசதியுடன் கூடிய டோமோதெரபி சாதனம் தற்போது பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் பேச்சு :

இந்த டோமோதெரபி சாதனத்தின் பயன்பாட்டை மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புற்றுநோய் சிகிச்சையில் ஒரு சிறப்பான மாற்றத்தை விளைவிக்கும் வகையில் கதிரியக்க சிகிச்சையில் இந்த நவீன சாதனத்தை அறிமுக செய்திருப்பதாக தெரிவித்தார். இந்த நவீன சாதனம் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து அதனை முழுமையாக நீக்கும் இந்த சிகிச்சை, இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com