கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலை கண்டு தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்! - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் சாதாரண வைரஸ் தான் தக்காளிக்கும் இதற்கும் எவ்வித சம்மதமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருக்கிறார். 

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலை கண்டு தமிழக மக்கள் அச்சம் கொள்ள  வேண்டாம்! - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு இதுவரை 85 குழந்தைகள் பாதிப்பிற்கு ஆளானதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவை குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே குறி வைத்து தாக்குவதால் அவர்களுக்கு சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் தோன்றுவதன் அடிப்படையில் இதனை தக்காளி காய்ச்சல் என்கின்றனர். இந்த காய்ச்சல் அதிகமாக கொல்லம் மாவட்டத்தில் காணப்படுவதால் அப்பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டும் உள்ளனர். மேலும் இதனை கண்காணிக்கும் பொருட்டு பாதுகாப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இதனை தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இந்த தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார். மேலும் இவை சாதாரணமான வைரஸ் தான் இதற்கும் தக்காளிக்குமே எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் சிக்கன் குனியா நோயால் பாதிக்கப்பட்டு நலமடைந்த குழந்தைகளை தான் அதிகம் தாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. தண்ணீரில் உருவாகும் கொசுக்களினால் பரவ வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர். இதனால் கொசுக்களை ஒழிக்க தேவையான முயற்சிகளை கையாண்டு வருவதால் இவ்வகையான  தக்காளி வைரஸ் குறித்து பொதுமக்கள் யாவரும் அச்சப்படதேவையில்லை என தெரிவித்துள்ளார்.