இன்று போகிப் பண்டிகை கொண்டாட்டம் : பல இடங்களில் புகை மூட்டம் !!

தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.

இன்று போகிப் பண்டிகை கொண்டாட்டம் : பல இடங்களில் புகை மூட்டம் !!

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். அதன்படி தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை மக்கள் வரவேற்றனர். மேலும், பிளாஸ்டிக், ரப்பர்,போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை அடுத்து பழைய பாய், பேப்பர் அட்டைகள், துணிகள் போன்றவற்றை எரித்து அதிகாலையிலேயே போகி பண்டிகையை கொண்டாடினர்.