திருவாரூர்: கல்லூரி மாணவி தற்கொலை..வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு..!

மன அழுத்தத்தால் தற்கொலை என மாணவி கடிதம் எழுதி வைத்தும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்..!

திருவாரூர்: கல்லூரி மாணவி தற்கொலை..வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு..!

கல்லூரி மாணவி தற்கொலை: நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த வேலுச்சாமியின் மகள் காயத்ரி  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படித்த நிலையில்  நேற்று துக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார்.

மன அழுத்தத்தால் தற்கொலை: இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக  மாணவி காயத்ரி எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.  

வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு: எனினும் மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வரும் நிலையில், வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி  சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.