புலியை வேட்டையாடக்கூடாது- உத்தரவை எதிர்த்து வழக்கு

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புலியை வேட்டையாடக்கூடாது-  உத்தரவை எதிர்த்து வழக்கு

நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, புலியை சுட்டுக் கொல்வது  உள்பட அதை வேட்டையாடுவதற்கான  உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ்  பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.