ஆட்கொல்லி புலியை கண்காணிக்க கால்நடைகளை கட்டிவைத்து வேட்டை…

  மசினகுடி வனப்பகுதியில் இருந்த ஆட்கொல்லி புலி நடமாடும் பகுதியை கண்காணிக்க கால்நடைகளை கட்டிவைத்து தேடுதல் பணி தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆட்கொல்லி புலியை கண்காணிக்க கால்நடைகளை கட்டிவைத்து வேட்டை…

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊருக்குள் புகுந்த புலி, கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் 4 பேரை அடித்து கொன்றது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, அவர்களுக்கு போக்கு காட்டி மசினகுடி பகுதிக்கு புலி இடம்பெயர்ந்தது. இதனையடுத்து, அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது. அதன்படி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், கேரள வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் என 5 குழுக்களாக பிரிந்து, ஆட்கொல்லி புலியை தேடினர். மாலை 5 மணி வரை தேடுதல் வேட்டை நடத்தியபோதும், புலி எங்கு இருக்கிறது? என தெரியவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அவர்கள், இரவு நேரங்களில் தனியாக வீட்டைவிட்டு வெளியில் வர கூடாது என்றும், மாடுகளை வனப்பகுதியில் மேய்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை புலியை பிடிக்க அடுத்தடுத்து களமிறங்கும் வனத்துறை மற்றும் மருத்துவ குழு, புலி நடமாடும் பகுதியை கண்காணிக்க கால்நடைகளை கட்டிவைத்து தேடுதல் பணி தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளது. வனப்பகுதிகளில் சென்றிருக்கும் வனக் குழுவுக்கு அதிநவீன தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கிடாக்கி  மூலம் புலியின் நடமாட்டத்தை தெரிவிக்கவும் ட்ரோன் கேமரா மூலம் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருக்கும் பகுதியை கண்காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com