பொருளாதாரம் குறித்து நிதியமைச்சர் கூறுவது தனக்கே புரிவதில்லை- சட்டபேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய துரைமுருகன்

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவே வருவதாகவும், பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிப்பதற்காக வரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

பொருளாதாரம் குறித்து நிதியமைச்சர் கூறுவது  தனக்கே புரிவதில்லை- சட்டபேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய துரைமுருகன்

சட்டப்பேரவையில் நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நூறு நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால், மீண்டும் மீண்டும் ஒரே கருத்தை பேச வேண்டாம் என்றும், ஆக்கபூர்வமான கருத்துக்களை உறுப்பினர்கள் பேச வேண்டும்" என அறிவுறுத்தினார். 

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "அமைச்சர்கள் விளக்கம் அளிக்கும்போது சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.  அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கேட்டால்,  டீ குடித்துவிட்டு வரும் வரை அதிமுக உறுப்பினர்கள் அதையே விளக்கி கொண்டிருப்பார்கள் என நகைச்சுவையோடு கூறினார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "பொருளாதாரம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்றும், மக்கள் பிரச்சனையை பேசதான் சட்டப்பேரவைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த துரைமுருகன், பொருளாதாரம் குறித்து நிதியமைச்சர் கூறுவது, தனக்கே முழுவதுமாக புரிவதில்லை என கூறி நகைப்பை ஏற்படுத்தினார்.