சென்னையில் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட் தயாரித்த மூவர் கைது...!

சென்னையில் நூற்றுக்கணக்கான போலி  பாஸ்போர்ட் தயாரித்த மூவர் கைது...!

சென்னையில் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட் போலியாக தயாரித்த கொடுத்த மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஷேக் அகமது என்பவரை பிடித்து கொடுத்து போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதாக புகார் ஒன்றை அளித்தனர். அதன் அடிப்படையில் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த முகமது சேக் இலியாஸ்  விசாரணை மேற்கொண்டனர். 

அதில், புகாரி மற்றும் இலியாஸ் என்பவரும் போலியாக பாஸ்போர்ட் மற்றும்  விசா தயாரித்து கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். இராயபுரத்தில் உள்ள புகாரி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்த போது போலியாக பாஸ்போர் தயாரித்து கொடுப்பதற்கான நகல், ரப்பர் ஸ்டாம்ப், மை, பிரிண்டர் மற்றும் 100 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்டை பறிமுதல் செய்தனர். அதனை சென்னை மத்திய குற்றப்பிரவின் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டார்.

மேலும் இந்த வழக்கில் முகமது ஷேக் இலியாஸ், புகாரி, சிவக்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலர் இருப்பதாக அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கபப்ட்டதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க    | " ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் தரவேண்டும்...! மீறினால் பந்தாடப்படுவீர்..! பழிவாங்கப்படுவீர்...! "

இதனிடையே, கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் மற்று போலியாக விசா தயாரித்து பலர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்கு 2 லிருந்து 3 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறினர்.

    |