தேவாலயத்திற்கு வருபவர்கள் இதை செய்வது கட்டாயம்!

தேவாலயங்களில் சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக தேவாலயத்திற்கு வரக்கூடியவர்களை பகுதி பகுதியாக உள்ளே அனுமதிக்க படுவார்கள் என அருட்தந்தை தேவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதில் தேவாலயங்கள், கோவில்கள் மசூதிகள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதல் தேவாலயங்கள் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தேவாலயம் திறக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருட்தந்தை தேவ பிரசாத் தேவாலயங்கள் திறப்பதற்கு அனுமதி அளித்த தமிழ  அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வர கூடியவர்களுக்கு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.உடல் வெப்ப பரிசோதனை செய்ய படுகிறது.குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற தேவாலயத்திற்கு வரக்கூடியவர்களை பகுதி பகுதியாக உள்ளே அனுமதிக்க படுகிறது. மேலும் சிறுவர்கள் மற்றும் வயதானவர்களை கூடிய அளவிற்கு அனுமதிப்பதில்லை என்றார்.