” முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர்” - அமைச்சர் துரைமுருகன்.

” முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர்” -  அமைச்சர் துரைமுருகன்.

வேலூர் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம்  அம்முண்டியில்   தமிழக அரசின்  கூட்டுறவு சர்க்கரை ஆலை  செயல்பட்டு வருகிறது.  இதில்  ரூபாய் 95 லட்சம் மதிப்பில்  நவீன ஆய்வகம்  மற்றும் எடை மேடை  திறப்பு விழாவும்  விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார்  கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்  காமாட்சி   உள்ளிட்டோரம்  திரளான விவசாயிகளும் பங்கேற்றனர்.  இதில், சிறப்பு அழைப்பாளராக  தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் கலந்து கொண்டு  பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

 இதில்  மானிய விலையில் அறுவடை இயந்திரம்  உழவு எந்திரங்கள்  உள்ளிட்டவர்களும் வழங்கப்பட்டது  விழாவில்  அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-

” சில நேரங்களில்   நடந்துள்ளது சில தவறுகளை மன்னித்துள்ளேன் தவறுகள் நடந்துள்ளது  விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு  யார் யார்  என்னென்ன தவறுகள் செய்தார்கள் என  கண்டுபிடித்து  கையில் விலங்கு மாட்டாமல் விடமாட்டேன்.  திமுக தான்  வேளாண்மைக்கான தனி பட்ஜெட் போட்டது.    சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பலர் பல ஆண்டுகளாக  தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.  அது போல் பத்தாயிரம் பேருக்கு மேல்  30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர்.  அவர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்”,   என்று பேசினார்.

இதையும் படிக்க   | ” மேல்முறையீடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் ” - ஓபிஎஸ்.