எந்தவித பாரபட்சமுமின்றி சட்டம்-ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படும்- தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டம்-ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படும் என புதிய காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

எந்தவித பாரபட்சமுமின்றி சட்டம்-ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படும்- தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவில் சேர்க்கப்பட்டதால், அவரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராக இருந்த  பாலாஜி சரவணன்,  இன்று தூத்துக்குடி எஸ்.பியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறை உங்கள் நண்பன் என்ற அடிப்படையில்  மக்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். 

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டம்-ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.