விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை...சசிகலா.!!

விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை என்றும் இதை அவர்கள் உணரவேண்டும் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

 விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை...சசிகலா.!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசிய சசிகலா கூறுகையில்,

ஜெயலலிதா பிறந்தநாள் 38 ஆண்டுகள் கூடவே இருந்து செஞ்சிருக்கே, இவையெல்லாம் நினைத்துக் கொண்டே தான் இங்கு வந்தேன். தொண்டர்களை யெல்லாம் துணையாக வைத்துவிட்டு அம்மா சென்றுள்ளார் என்றார்.  

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது தமிழக உரிமைகளை எந்த விதத்திலும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை என கூறிய அவர், எனக்காக தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமையாகும், 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் தொடர் தோல்வியை கண்டதில்லை., இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை, இதை அவர்கள் உணரவேண்டும் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.