திசை திருப்பவே இந்த வருமான வரித்துறை சோதனை...!!!

திசை திருப்பவே இந்த வருமான வரித்துறை சோதனை...!!!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த செய்தியை திசைத் திருப்பவே இந்த வருமான வரித்துறை சோதனை என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகத் தேர்தல் முடிவு காஷ்மீர் முதல்  கன்னியாகுமரி வரை காட்டுத் தீயை ஏற்படுத்தியுள்ளது என்றும், கர்நாடகத் தேர்தல் முடிவு பா.ஜ.க.விற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால், இதனை ஜீரணிக்க முடியாத பாஜக அரசு வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகவும், அண்ணாமலையின் தூண்டுதலினாலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும்   ஆர்.எஸ். பாரதி புகார் தெரிவித்தார்.  
 
வருமான வரித்துறை சோதனையைத் தடுக்கும் வகையில் தி.மு.க.வினர் யாரும் பங்கேற்க கூடாது என கூறியதகாவும், வருமான வரித்துறை சோதனைக்கு தி.மு.க. கவலை படாது என்றும் அவர் கூறினார். 

இதையும் படிக்க:   பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்தது சிறந்த முடிவு...தமிழக அரசின் வரவேற்பை வரவேற்ற ராமதாஸ்!