30 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிலையங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் தமிழகத்தில் 30 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறவடைந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

30 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிலையங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரிசெய்ய ஓமந்தூரார் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் பிரெஞ்சு அரசு மற்றும் Saint Gobain நிறுவனம் சார்பில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  கொரனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த மையத்தில் சரி செய்யப்பட்டு வருவதாகவும்,  உடற்பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை Saint Cobain நிறுவனம் வழங்கியதாகவும் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.