அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சிபிஎம் போராட்டம்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு!!

அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறக் கோரி மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சிபிஎம் போராட்டம்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு!!

4 ஆண்டுகளுக்கு மட்டும் இந்திய ராணுவத்தில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தொடர்ந்து திட்டத்தை திரும்பப்பெறக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து ரயில் மறியல் செய்ய முயன்று, போலீசாரின் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்துக்குள் ஓடிச் சென்றனர். அப்போது சிலரின் உடைகளை போலீசார் கிழித்ததால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.