அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை - திருமாவளவன்.!!

அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை  - திருமாவளவன்.!!

சென்னை வடபழனியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,   

அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டது என்று சொல்ல முடியாது அதை வழி நடத்த வலிமையான ஆளுமை இல்லை என கூறினார்.

அதிமுக தனது ஐந்தாண்டு காலம் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவை தோளில் சுமந்து வந்தனர். இதனால் அதிமுக மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து விட்டது. சசிகலா அதிமுகவுடன் இணைவது தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் தலையிட முடியாது என்றார்.

பாஜக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அண்ணாமலை அவர்களுக்கு 1,2 கூட ஒழுங்காக படிக்கவில்லை என்று தான் தெரிகிறது. பாஜக மூன்றாவது இடம் என்பது ஒரு மாயை, பல இடங்களில் டெபாசிட் கூட பெறவில்லை அதனை மூடி மறைப்பதற்காக ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உக்ரேனில் சிக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை உடனடியாக தாயகம் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.