சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லை… மதுரவாயலில் அவலம்!  

மதுரவாயல் அருகே, சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லை… மதுரவாயலில் அவலம்!   

மதுரவாயல் அருகே, சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் அருகே, அடையாளம்பட்டு பகுதியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு, தாம்பரம் புறவழிச்சாலை அருகே சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில்  சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுடுகாட்டில் கொட்டுகின்றனர். இதனால்  அங்கு டன் கணக்கில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது.

இதனால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவோ, எரிக்கவோ இடமில்லாத நிலை ஏற்படுள்ளது. அத்துடன், இந்த குப்பைகளை சிலர் கொளுத்தி விடுவதால், சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால், குப்பைகளை அகற்றிவிட்டு, சுடுகாட்டை மீட்டுத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.