இறந்த குழந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லை : குப்பைத் தொட்டியில் வீசி சென்ற தந்தை !!

ஏழ்மை காரணமாக இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய வழியின்றி தந்தை குப்பைத் தொட்டியில் வீசியது தெரியவந்ததால் போலீசார் உதவியுடன் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

இறந்த குழந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லை : குப்பைத் தொட்டியில் வீசி சென்ற தந்தை !!

குப்பைத் தொட் டியில் குழந்தையின் சடலம்

சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையில் கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு குப்பைத் தொட் டி அருகில் ஒரு சணல் பையை நாய்கள் இழுத்துக் கொண் டிருந்ததை கண்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது அதில் இறந்த நிலையில்  பிரசவமான குழந்தை இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், திருவல்லிக்கேணி காவல் துறையினர் அவ்விடத்திற்குச் சென்று இறந்த நிலையில் அடையாளமற்றுக் கிடந்த பிறந்த குழந்தையின் உடலை பாதுகாப்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசி டிவி காட்சி

பின்னர் திருவல்லிக்கேணி துணை ஆணையர் உத்தரவின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திலிருந்து சி.சி. டி.வி. காட்சிகள் மூலமும், குழந்தை இருந்த கைப்பயில் கிடைத்த விவரங்களின் அ டிப்படையிலும் அக்குழந்தை அரசு கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  கவிதா என்பவருக்கு பிறந்த குழந்தை என கண்டறிந்தனர். மேலும், குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் முறையாக இறுதிச்சடங்கு நடத்த கவிதா குழந்தையை தனது கணவர் தனுஷிடம் கொடுத்ததும், குழந்தை இறந்த சோகத்தில் மன வேதனையில் மது அருந்தியிருந்த தனுஷ், இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் குழந்தையை குப்பைத் தொட் டியில் போட்டுவிட்டுச் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.

பணம் இல்லை

இறுதி சடங்கிற்கு செலவு செய்ய பணம் இல்லாததாலேயே இவ்வாறு செய்ததாக தனுஷ் கூறிய நிலையில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் குழந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து திரும்பப் பெற்று கிருஷ்ணாம்பேட்டை இடுகாட் டில் உறவுகள் தன்னார்வ தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மூலமாக குழந்தையின் தந்தை தனுஷுடன் சேர்ந்து முறையாக நல்லடக்கம் செய்தனர். திருவல்லிக்கேணி காவல் துறையினரின் இந்த சிறப்பான நடவ டிக்கையை உயரதிகாரிகள் வெகுவாக பாராட் டியுள்ளனர்.