தி கேரளா ஸ்டோரி வெளியிடக்கூடாது என வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை -அசாருதீன்

தி கேரளா ஸ்டோரி வெளியிடக்கூடாது என வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை -அசாருதீன்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்யவில்லை என்றால் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போராட்டம் தொடரும்- மாநில துணைச் செயலாளர் அசாருதீன்

தி கேரளா ஸ்டோரி தமிழகத்தில் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னை அண்ணாநகர் உள்ள வி ஆர் மால் முன்பாக முற்றுகை போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். திரையரங்கை முற்றுகையீடு சென்றவர்களை காவல்துறையினர் அங்கேயே தடுத்து நிறுத்தி கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர் அப்பொழுது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மனிதநேய  ஜனநாயக கட்சியை சேர்ந்தோர் கோஷங்களை எழுப்பினர் மேலும் இது கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் போஸ்டரை எரித்தும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.


அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர்  அசாருதீன்


 இஸ்லாமியருக்கு எதிராக இஸ்லாமிய பெண்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது போல்  அந்த இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது போல்  கேரளாவில் மிகப்பெரிய சக்தி  செயல்படுவது போல்  புர்கா அணிந்த பெண்களும் இஸ்லாமிய  மதத்தை தழுவிய பெண்களும்   ஐ எஸ் ஐ எஸ்  தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது போல்  இந்த  இந்த திரைப்படம் தழுவி உள்ளதாகவும்  இதற்கு மத்திய பாஜக அரசு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.

தி கேரளா ஸ்டோரி..கிளம்பும் எதிர்ப்பு..தமிழகத்தில் வெளியிடக்கூடாது..  உளவுத்துறை எச்சரிக்கை | The Kerala Story movie should not be released in  Tamil Nadu Intelligence alert ...

 இந்த திரைப்படத்தின் உள்ள அத்தனை கருத்துக்களும் ஒரு சமுதாயத்தில் உள்ள வலிகளை உணர்த்துவதாகவும் இந்தப் படத்தில் பல காட்சிகள் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளதாகவும்  இந்தத் திரைப்படத்திற்கு ஆதரவாக நேற்றைய தினம் பிரதமர் மோடி  கர்நாடக தேர்தல் பரப்புரையில் பேசியிருப்பது வெறுப்பு அரசியலை தூண்டுவதாகவும் இதே போல் தான் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி ஒரு ஆவணம் படம் எடுக்கப்பட்டது.அந்த ஆவணப்படம் உண்மையினை பறைசாற்றுகிறது  எனவும், தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம்  பொய்யான  கதை இதனை தமிழக அரசு வெளியிடக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 மேலும் படிக்க | தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு - பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை - முதலமைச்சர் 2 ஆண்டு நிறைவு விழாவில் பேச்சு

இந்த படைத்த திரையிட தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்க உரிமையாளர் சங்கமும்  எதிர்ப்பு தெரிவித்ததாகவும்  ஆனால் தமிழ்நாட்டில் உள்ள  மால்களின்  மட்டும் வெளியிடப்பட்டுள்ளது  இதை கார்ப்பரேட்  மால்கள் மத்திய அரசுக்கும் சன் பரிவார இயக்கத்திற்கும்  ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் உடனடியாக இந்த இது போன்ற மால்கள் இந்த திரைப்படத்தை திரையிடுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,இல்லையென்றால் இது போன்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்று  தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் எதிர்ப்புக்கிடையே 'தி கேரளா ஸ்டோரி' படம் இன்று வெளியீடு.. டிஜிபி  சைலேந்திரபாபு பரபரப்பு உத்தரவு | 'The Kerala Story' movie release today :  DGP Sylendra Babu ...

 32,000 பெண்கள்  ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக   இந்தத் திரைப்படத்தில் கூறப்பட்டிருப்பது பொய்யானது எனவும்  அதற்கான ஆதாரங்கள் இருந்தால் வெளியேட்டும்  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் சமூக வலைதளங்களில் ஐஏஎஸ் என்ற பதவித்தாலே உளவுத்துறைக்கு தெரியுமே  32 ஆயிரம் பேர் சென்றதாக கூறப்படும் தகவல் உண்மை இல்லை ஒரு சமூகத்தை குற்றப்படுத்த வேண்டும் ஒரு சமூகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று இதுபோன்ற தகவல்களை பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க |  இந்த அரசு வாய் சவடாலான அரசாக இருக்கே தவிர செயலில் இல்லை.....!" - செல்லூர் ராஜு

 திரைப்படம் திரையிட   தமிழக அரசு  காவல்துறை மூலமாக மால்களுக்கு பாதுகாப்பு  அளிப்பதும் இந்த திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்காததும்  வாக்களித்த ஒரு சமூகத்தின் மக்களை  பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.திமுகவை கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, யார் எதிர்ப்பு தெரிவித்து போராடவில்லை என்றாலும்  மனிதநேய ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராடும் என்று அவர் தெரிவித்தார்.இந்தத் திரைப்படம் வெளியிடக் கூடாது என்று செய்தி துறை அமைச்சரை சந்தித்தோம்  எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தும்  ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை   அவர் குறிப்பிட்டார்.