ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர்  உள்ளது... அமைச்சர் கே.என்.நேரு தகவல்...

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால்தான் கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர்  உள்ளது... அமைச்சர் கே.என்.நேரு தகவல்...

சென்னை கே.கே.நகர் - எம்.ஜி.ஆர் நகர்,   மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் கழிவுநீர்  கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், இதனை அண்ணா பிரதான சாலை - அழகிரிசாமி சாலை சந்திப்பில் ஏற்பட்ட பள்ளத்தினை சீரமைக்கும் பணிகளையும், நெசப்பாக்கம் கழுவுநீரகற்று நிலையம் அருகில் ஏற்பட்ட பள்ளத்தினை சீரமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நெசப்பாக்கத்தில் 47 கோடி செலவில் 10 எம்.எல்.டி கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் 3-ம் நிலை கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் மேலும் பாதிப்புகள் ஏற்படதாவாறு ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான பணிகளை விரைவில் தொடங்கி நிரந்தர தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ்குமார் உள்ளொட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கே.கே.நகர் - எம்.ஜி.ஆர் பகுதியில் மூன்று இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மண் தன்மை சரியில்லாதால் சாலைகள் அமைக்கும் பணி மெதுவாக நடைபெறுகிறது என்றும் 1 வருடத்தில் பணிகள் முடிவுற்று கே.கே.நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கட்டமைப்பில் உள்ள பாதிப்புக்கான பணிகள் முடித்து விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இந்த பகுதியின் பெயர் முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் உள்ளதால் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய  பொறுப்பு அதிகாமக உள்ளது விரைவில் பணிகள் முடிவடையும். இப்பகுதியில் வரும் 57 எம்.எல்.டி கழிவு நீரை மறு சுழற்சி செய்து அருகில் உள்ள ஏரியில் கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக் 10 எம்.எல்.டி தண்ணீர் சோதனை அடிப்படையில் மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தற்போது சென்னையில் 140 எம்.எல்.டி கழிவு நீர் மறு சுழற்சி  செய்யப்பட்டுள்ளது. கழிவுநீரை மறு சுழற்சி செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என கூறினார்.

குடிநீர் வடிகால் வாரியத்தில் தரமான குழாய்கள்தான் பதிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்காதவாறு பணிகள் நடைபெறுகிறது. மழைநீர் தேங்கும் இடங்களை ஆராய்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறும். திமுக அரசு பொறுப்பேற்ற 5 மாதத்தில் சென்னை மாநகராட்சியில் இதுவரை  700 கீ.மீ சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால்தான் கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை என கூறினார்.

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ்குமார், சென்னையில் 740 தெருக்களில் பழைய காலத்து கழிவு நீர் குழாய்கள் உள்ள தெருக்களை கண்டறிந்து மழை காலத்திற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திலும் முழுமையாக கழிவு நீர் குழாய்களை தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரித்து மழைகாலத்தில் கழிவுநேர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு வாரியாக குழுக்கள் அமைத்து பழைய  கழிவுநீர் குழாய்கள் உள்ள தெருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.