தேனியில் பிறந்த குழந்தை இறந்த விவகாரம்: 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நோட்டீஸ்...

தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக 2 மருத்துவர்கள் உள்பட 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேனியில் பிறந்த குழந்தை இறந்த விவகாரம்:  2 மருத்துவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நோட்டீஸ்...

தேனி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த பச்சிளம் குழந்தை உயிர்பிழைத்து, சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பாலாஜிநாதன் தலைமையில் 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முதல் கட்டமாக சம்பவத்தன்று பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய 2 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட 10 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் மெத்தமான செயல்பட்டவர்கள் மீது ஓரிருநாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.