திருட்டு 102 செல்போன்கள் கண்டுபிடிப்பு இந்த திருட்டு ரொம்ப புதுசா இருக்கே

செங்கல்பட்டு அருகே திருடுபோன 102 செல்போன்கள் பறிமுதல் உரியவர்களிடம் ஒப்படைப்பு.
திருட்டு  102 செல்போன்கள் கண்டுபிடிப்பு  இந்த திருட்டு ரொம்ப புதுசா இருக்கே
Published on
Updated on
1 min read



செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் அலுவலக எல்லைகளுக்குள்ளான நான்கு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ்  உத்தரவின் பேரில் துணை ஆணையர் அதிவீர பாண்டியன் மற்றும் உதவி ஆணையர் ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் தீவிர முயற்சியில் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பீர்க்கங்காரணை ஓட்டேரி உள்ளிட்ட நான்கு காவல் நிலையங்களில் திருடுபோன வழக்குகளில் 102 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து செல்போன்கள் பறிகொடுத்தவர்கள் அந்தந்த காவல்நிலையத்தில் கொடுக்கபட்ட புகாரினை வைத்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வீடுகளில் உறங்கும்போது கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது. வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அதேபோல் வெளியூர் செல்லும்போது வாசல்கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு செல்லவும். இதை கடைபிடத்தால் திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாக துணை ஆணையர்  அதிவீர பாண்டியன் மக்களுக்கு அறிவுரை கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com