மீண்டும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்...

மேலூரில் தந்தை கண்டித்ததாக கூறி இரண்டு தினங்களுக்கு முன்பு செல் போன் கோபுரத்தில் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த அதே நபர் மீண்டும் செல் போன் கோபுரத்தில் ஏறி குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். 

மீண்டும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்...

மதுரை மாவட்டம் மேலூர் அண்ணாகாலனியை சேர்ந்தவர் சபூர் அலி. இவரது மகன் தான் ஈசாக் முகமது, வேன் ஓட்டுநரான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்போன் உயர் கோபுரத்தின் மீது ஏறி உச்சியில் நின்றவாறு குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரம் போராடி அவரை பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில் அதே நபரான ஈசாக் முகமது மீண்டும் அதே செல்போன் கோபுரத்தில் மீது ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டு குதித்து விடுவதாக மிரட்டம் விடுத்துள்ளார். வழக்கம் போலவே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனத்தோடு வந்து சேர்ந்தனர்,108 ஆம்புலன்ஸ் வாகனமும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

காவல் துறையினர் மைக்கில் பேசி இறங்கி வருமாறு கேட்ட வண்ணம் இருந்தனர் ஆனாலும் அவர் செவி சாய்க்க வில்லை, இந்தநிலையில் அவரது உறவினர் ஒருவர் தைரியமாக செல்போன் கோபுரத்தில் ஏறி அவரிடம் சென்று பேசினார்,ஆனாலும் இறங்கி வர ஈசாக் சம்மதிக்கவில்லை.

அதன்பின்னர் ஈசாக்கின் தாய், தந்தையை அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களும் அழுது கொண்டு இறங்கி வருமாறு கெஞ்சினர். இறுதியில் போலீசார் அடிக்கவோ காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லவோ கூடாது என உறுதி அளித்ததை தொடர்ந்து ஒருவழியாக ஈசாக் மற்றும் அவரை அழைத்து வரச் சென்ற உறவினர் ஹக்கீம் என்பவரும் கீழே இறங்கி வந்தனர், இதனால் அப்பகுதியில் சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேல் கடுமையான பரபரப்பு நிலவியது.