மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை தடுக்க மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை கிண்டியில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,  கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அந்தந்தப் பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வெழுத அனுமதிப்பது தொடர்பாக, முதல்வர் வழங்கும் உத்தரவுகள் செயல்படுத்தப்படும் என்றார்.

ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது  மன வேதனை தருவதாக கூறினார். கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம்  மனரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை நல்வழிப்படுத்த மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அஞ்சல் துறையில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ், இதை  மாவட்ட அளவிலேயே எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.