நீர் வெளியேற்றம் அதிகரிப்பு... சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்...

நீர் வெளியேற்றம் அதிகரிப்பு... சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் விளைவால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.  அந்த வகையில், 5 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 7 ஆயிரத்து 492 கன அடியாக அதிகரித்துள்ளது.
 
இதனிடையே அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால், அதன் நீர் மட்டம் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில், 96 புள்ளி 81 அடியாக இருந்த அணை நீர் மட்டம் தற்போது 89 புள்ளி 15 அடியாக சரிந்துள்ளது. இதேபோன்று நீர் இருப்பும் 60 புள்ளி 78 டி.எம். சி.,யிலிருந்து 51 புள்ளி 68 டி.எம். சி., யாக சரிந்தது.