வேற்று சமுதாயத்தினருடன் பழகியதால்...சொந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கிராமம்!!

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேற்று சமுதாயத்தினருடன் பழகியதால்...சொந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கிராமம்!!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். நூற்பாலை தொழில் செய்து வரும் இவருக்கும், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தலைவரான சின்னப்பன் என்பவர், வேறு சமூகத்தினரிடம் பழகியதாகக் கூறி ராஜவேலையும், அவரது குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருப்போரும் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்படுவர் என எச்சரித்த சின்னப்பன், ராஜவேல் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சொந்த சமூகத்தினரின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜவேல், தற்கொலை செய்துகொள்வதை விட வேறு வழியில்லை எனக் கூறி, பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார்.