27-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த லாரி

திம்பம் மலைப்பாதையில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

27-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த லாரி

திம்பம் மலைப்பாதையில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மரக்கட்டை பாரம் ஏற்றி வந்த லாரி 6வது கொண்டைஊசி வளைவில் திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.