கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி... தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

ஓபிசி பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி... தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 385 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. எதிர்க் கட்சிகளும் ஆதரவு அளித்ததால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியல் சட்டத்தின் 127-வது திருத்த மசோதாவாக மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்து, தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஓபிசி பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் மசோதா நிறைவேறியது கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

நூற்றாண்டுகால காயங்களுக்கு சிறு மருந்தாகவும், சமூக நீதிக்கு அடித்தளமாகவும் இந்நாள் அமைந்துள்ளதென பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு வரலாற்றில் இந்நாள் என்றும் நினைவுகூரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.