விபரீதமாகிய விளையாட்டு... திருப்பூர் அருகே நடந்த சோகம்...

திருப்பூர் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது, கழுத்து, இறுக்கப்பட்டு,  பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரீதமாகிய விளையாட்டு... திருப்பூர் அருகே நடந்த சோகம்...
சேலம் அரூரை சேர்ந்த வெங்கடேஷ் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பளவஞ்சிப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மித்ரன் என்ற 10 வயது மகனும், பிரசன்னா என்ற 6 வயது மகளும் உள்ளனர். 
 
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த சிறுவன் மித்ரன் சேலையில் ஊஞ்சல் கட்டித்தரச் சொல்லி விடையாடி வந்துள்ளார். 
 
இந்நிலையில் ஊஞ்சலை சுற்றிவிட்டு விளையாடியபோது, எதிர் பாராத விதமாக சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  
 
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் விளையாடும் போது, பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்த சிறுவனின் மறைவு.