முடிவுக்கு வந்த பயிற்றுநர்கள் போராட்டம்......

முடிவுக்கு வந்த பயிற்றுநர்கள் போராட்டம்......

சென்னையில் நடைபெற்று வந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் உண்ணாவிரதம் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ் பெறப்பட்டது. 

சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த 3 நாட்களாக பணி நிரந்தரம் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து பாராத சாரணியர் மாநில தலைமையகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநில நிர்வாகிகள் மூலம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் சுமூக  தீர்வு எட்டபட்டதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு பயிற்றுநர்கள் தங்கள் போராட்டத்தை  வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள்......