தீபாவளியை தித்திப்பாக்க...ஆவினில் ரூ. 200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு !

தீபாவளியை தித்திப்பாக்க...ஆவினில் ரூ. 200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு !

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனத்தின் சார்பில் 9 வகையான இனிப்புகளும் கார வகைகளில் மிக்சர் உள்ளிட்ட காம்போ பேக் என 9 வகையான இனிப்புகளை  தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அம்பத்தூரில் அறிமுகப்படுத்தினார்.

இதையும் படிக்க: எஸ்.பி.வேலு மணியின் டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு...இறுதி விசாரணை எப்போது?

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக அம்பத்தூரில்  உள்ள ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், இனிப்புகளை சுத்தமாக தயாரிக்கப்படுகிறதா என பார்வையிட்டதுடன் இனிப்பு பேக்குகளை பேக் செய்யும் புதிய இயந்திரத்தின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் பணியாளர்களை சுகாதாரத்துடன் இனிப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்ட வலியுறுத்தினார்..