குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஒளிந்து நின்று பார்த்த மாணவர்- மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே பெண் குளித்துக் கொண்டிருந்ததை ஒளிந்து நின்று பார்த்த மாணவரை மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஒளிந்து நின்று பார்த்த மாணவர்- மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கேசவன் புதூர் பகுதியில் 12 படிக்கும் மாணவர் பெண் குளித்துக் கொண்டிருந்ததை ஒளிந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட சிலர் மாணவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அது குறித்த வீடியோ காட்சி அப்பகுதி முழுவதும் பரவி வைரலாகி வருகிறது.

இந்த வாட்ஸ் அப் வீடியோ குறித்து பூதப்பாண்டி போலீசார், வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.