வகுப்புகளை சுத்தம் செய்ய வைப்பதாக கூறி, மாணவன் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார்...!

வகுப்புகளை சுத்தம் செய்ய வைப்பதாக கூறி, மாணவன் மாவட்ட  கல்வி அலுவலரிடம் புகார்...!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அரசு பள்ளியில் மாணவர்களை பள்ளி  வகுப்புகளை சுத்தம் செய்ய வைப்பதாக கூறி, மாணவன் மாவட்ட  கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பட்டைகோவில் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ்கான், இவரது மகன் சல்மான்கான் சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு வகுப்புகளை சுத்தம் செய்ய வைப்பதாக கூறி, தந்தையுடன் பள்ளி மாணவர் சேலம் மாவட்ட  கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.