முதல் அலையின் பொழுது அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது... ஆர்.பி.உதயகுமார்

முதல் அலையின் பொழுது அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது... ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய சலுகைகளை வழங்கிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி தடுப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து  முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்,முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் மதுரை மாவட்டத்தில் தற்போதைய வைரஸ் தொற்றின் நிலை என்பது அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படக் கூடிய ஒரு சூழ்நிலை என்பது நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் இது அறிவிக்க பட்ட எண்ணிக்கை மட்டுமே ஆனால் உயிர் பலி எண்ணிக்கை என்பது அளவுக்கதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு அதிகமான அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் விடுத்தனர்.

முதல் அலையின்பொழுது முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்பது சிறப்பாக இருந்தது என்றும்,  300க்கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தார்கள் ஆனால் தற்சமயம் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றனர்.

மதுரை மாவட்டத்தில் அதிமுக  வெற்றி பெற்ற 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய சலுகைகளை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர்கள்,தேவைக்கேற்ப படுக்கை மற்றும் ஆக்ஸிஜிஐன் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முதல் அலையின் பொழுது உணவு தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்கப்பட்டு வந்தது இப்போது நோயாளிகளுக்கு உணவு தட்டுப்பாடாக உள்ளது அதன் மூலமாகவே உயிர் இழப்பு என்பது தடுக்கப்படும். என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.