கீழ்தரமான கேள்வியை கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர்... ஜாதி பெயர் தெரிந்தால் தான் காப்பாற்றுவாரா..?

அடிப்பட்டு துடித்தவரிடம் ஜாதிப் பெயரை கேட்ட சிறப்பு உதவியாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

கீழ்தரமான கேள்வியை கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர்... ஜாதி பெயர் தெரிந்தால் தான் காப்பாற்றுவாரா..?
திருவண்ணாமலை பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.  கண்டெய்னர் வாகனம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காவிரி மேம்பாலம் அருகே முன் சென்ற வாகனத்தை முந்த முயன்றது.
அப்போது வலதுபுறமாக வந்த இருசக்கர வாகத்தின் மீது பலமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரியில் பின்சக்கரத்தில் சிக்கி ராமசந்திரன் என்பவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு துடித்து கொண்டிருந்தார். அப்போது தான் அடிப்பட்டு கிடந்த ராமசந்திரனிடம்  குமாரபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பன் இப்படி ஒரு கீழ்தரமான கேள்வியை கேட்டார்.
 
எதற்காக ஜாதி என்ன என்று கேட்டார். ஒருவேளை ஜாதி பெயர் தெரிந்தால் தான் அவரை காப்பாற்ற முயற்சி செய்திருப்பாரா? இல்லையென்றால் அவருக்கு பிடிக்காத ஜாதி பெயரை கூறியிருந்தால் அவரை அங்கேயே விட்டு விட்டு போயிருப்பாரா என இந்த வீடியோவை கண்ட வலைதளவாசிகள் கேள்வி கனைகளால் துளைத்து வருகின்றனர்.  
 
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து குமாரபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பன் நாமக்கல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் சமீப காலமாக போலீசார் செல்போன், மாமுல் என அற்ப காரணங்களுக்காக பொதுமக்களை தாக்குவதும், அதில் அப்பாவிகள் சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த காலங்களில் நடந்த இதுபோன்ற கொடூர சம்பவங்களை அரசு மூடி மறைத்து இழப்பீட்டு தொகை கொடுத்தாலும் இழந்த உயிருக்கு இழப்பீடு ஒன்று மட்டும் போதுமா? 
 
இதுபோன்று ஜாதி மதம் காழ்புணர்ச்சிகளை பயன்படுத்தி கொள்ள அரசாங்க வேலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் இதுபோன்ற வெறி பிடித்த காவலர்களை ஆய்தபடைக்கு மாற்றுவது தான் தீர்வா என குமுறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்... மேலும் ஒரு சில வெறிபிடித்த காவலர்களை ஒடுக்கும் விஷயத்தில் கடந்த அரசு செய்த அதே தவறை இந்த அரசும் நிச்சயம் செய்யாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.