நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

நாளை மறுநாள் 11ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

மே 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 11ம் வகுப்புப் பொதுத்தேர்வை 3 ஆயிரத்து 119 மையங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் இத்தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட இணையதளங்களில் முடிவுகள் வெளியாகும் எனவும், மாணவர்கள் பள்ளியில் கொடுத்துள்ள செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.