இனி ரேஷன் கடை அனைத்து நாட்களும் இயங்கும்- அமைச்சர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள நியாயவிலை கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாயவிலை கடையில் திடீரென கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் உள்ள ஆவணங்களையும் பயோமெட்ரிக் கருவியையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமி, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகும் அதன் அடிப்படையிலேயே தற்போதைய திடீர் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்த அவர் தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.