தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.968 சரிந்துள்ளதால் இல்லதரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வந்தது. இந்த மாத தொடக்கத்திலும் அதே நிலை தான். பெரிதளவு மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 சரிந்து ரூ.35,520க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றங்கள் ஏதுமில்லை.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.480 சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ.4,380க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.35,040க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.968 சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.