வரக்கூடிய காலங்களில் ஸ்டாலின் கை காட்டுபவர் தான் பிரதமர்...  திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி., பேச்சு...

இனிவரும் காலங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர்கள்தான் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருப்பார்கள் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜன் கூறியுள்ளார்.

வரக்கூடிய காலங்களில் ஸ்டாலின் கை காட்டுபவர் தான் பிரதமர்...  திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி., பேச்சு...

தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், 5 மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க., அ.ம.மு.க, த.ம.க, பா.ம.கா, கட்சிகளின் சேர்ந்த  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மொத்தம் 900 மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பாக கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற கோவை நாகராஜன் தி.மு.க.வில் இணைந்தார். இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாகராஜன், 

கோவை மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாக மாற்ற தமிழக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாற்றுவதற்கு பணியாற்றுவேன். ராமனுக்கு அணில்  போல கோவை மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு முதல்வருக்கு துணையாய் நின்று கோவை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன்.

என்னுடைய பாணியில் சொன்னால், எதிர்காலம் தி.மு.க.விடம் தான் இருக்கிறது அதற்கு நான் தான் ஓபனிங் பேட்மேன் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள். என்னுடைய வருங்கால சந்ததி காப்பாற்றப்பட வேண்டும். தமிழினத்தை காப்பாற்ற வேண்டும்  என்ற காரணத்தினால்  திமுகவில் இணைந்தோம். 

தலைவர் கலைஞர் எப்படி தன்னுடைய ஆளுமைமிக்க அரசியலால் இந்தியாவின் பிரதமர்களை தன் கைவிரல்களில் வைத்திருந்தாரோ, அதே போல் வருங்காலங்களில் தமிழக முதலமைச்சர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் வரவேண்டும். அந்த அளவிற்கு அரசியல் ஆளுமை கொண்ட தலைவராக தற்போது திகழ்ந்து வருகிறார். பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வருவார்கள் என புகழாரம் சூட்டிய அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜன்.