கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைவு...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

கோயம்பேடு  சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைவு...

பருவமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்தது. மழை ஓய்ந்த பிறகு காய்கறிகளின் விலை கட்டுக்குள் வரவில்லை. மழையால் பயிர்கள் சேதமடைந்ததை தொடர்ந்து காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை கட்டுக்குள் வராமல் இருந்தது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை  சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளன. உருளைக்கிழங்கு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ், பட்டாணி, கோவக்காய். முட்டை கோஸ் போன்றவை  கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.