105 ரூபாயை நெருங்கிய பெட்ரோல் விலை... கலக்கத்தில் வாகன ஓட்டிகள்...

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்து 105 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், டீசல் விலையும் 101 ரூபாயை நெருங்கியுள்ளது. 

105 ரூபாயை நெருங்கிய பெட்ரோல் விலை... கலக்கத்தில் வாகன ஓட்டிகள்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு வாழ்வாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 83 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது.