அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 

தமிழக அரசு செயல்படுத்திய அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் ஏற்கனவே அமலில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 

மூன்று நாட்கள் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை கோவையில் இருந்து தொடங்கிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன். நாமக்கல், திருப்பூர். ஈரோட்டில் யாத்திரை சென்று மக்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். புதிய மத்திய அமைச்சர்கள் மக்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோவையில் யாத்திரையை தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், மத்திய இணை அமைச்சர் ஆன பிறகு மக்களை சந்திக்க யாத்திரை செல்கிறேன். கொரோனா விழிப்புணர்வை பின்பற்றவே யாத்திரை நடக்கிறது என்றார். கொங்குநாடு பற்றி அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது மக்கள் முடிவு செய்ய வேண்டியது என்றார். மேலும், ஸ்டாலின் செயல்படுத்திய அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து பேசிய அவர், இது முதல் முறை அல்ல. ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் அமலில் இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு முன்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன்,அருந்ததியர்  சமூதாயத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திரமோடி இணை அமைச்சராக பதவியேற்று அழகு பார்த்துள்ளார் என்றும்  செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பா.ஜ.க தமிழகத்தில் எந்த கட்சியும் இதனை செய்ததில்லை என கூறினார்.
இந்த மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த  28 அமைச்சர்கள் உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.