உயிரிழந்த எஜமானரின் உடலை சுற்றி வந்த வளர்ப்பு நாய்: உறவினர்களை போன்று பரிதவித்து நின்ற சோகம்...

பெரம்பலூர் அருகே இடி தாக்கி உயிரிழந்த எஜமானரின் உடலை, அவரது வளர்ப்பு நாய் சுற்றி சுற்றி வந்து பரிதவித்த காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 

உயிரிழந்த எஜமானரின் உடலை சுற்றி வந்த வளர்ப்பு நாய்: உறவினர்களை போன்று பரிதவித்து நின்ற சோகம்...

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஆடு மேய்க்க சென்ற இவர், இடிதாக்கி இறந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, வீட்டு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அவரது மனைவி மகள், மகன், உறவினர்கள் என பலரும் கதறி அழுது தங்களின் சோகத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், ராமச்சந்திரன் ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று,  அவரது உடலை சுற்றி சுற்றி வந்து பரிதவித்து நின்றது. ராமச்சந்திரனின் உடல் மீது ஏறிக் கொண்டும், படுத்துக் கொண்டும் அந்த நாய் பரிதவித்த காட்சி அங்கிருந்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.